சர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்.!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

இயக்குனர் இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது நடித்து வரும் திரைப்படம் சர்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் கடந்த சில மாதங்களுக்கு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கொரோனா இரண்டாம் அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் படங்களின் படப்பிடிப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், ர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. 4 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் கார்த்தி இயக்குனர் மணி ரத்தனம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்காக பாண்டிச்சேரி செல்கிறார் கார்த்தி. விரைவில் சர்தார் திரைப்படத்திற்கான மற்ற அப்டேட்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.