அரிசோனாவில் யூமா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 7 பேர் காயமடைந்துள்ளனர்.
அரிசோனாவில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லைக்கு அருகே உள்ள யூமா நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. யூமா நகரில் உள்ள போலீசாருக்கு இரவு 11 மணிக்கு முன்னதாக ஒரு துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடப்பதாக தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து, அழைப்பு வந்த முகவரிக்கு போலீசார் வந்து பார்த்தபோது அங்கு துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சிலர் இருப்பதைக் கண்டுள்ளனர். பின்னர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் குறைந்தது ஏழு பேரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் எத்தனை பேர் சுடப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மேலும், சமீபத்தில் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்த கிட்டத்தட்ட 300 புலம்பெயர்ந்தோரை விடுவிக்க எல்லை ரோந்து திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க நகரத்தின் மேயர் டக்ளஸ் நிக்கோல்ஸ் குடியிருப்பாளர்களுக்கு அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.