அதிர்ச்சி தகவல்..! எமனாக மாறிய காற்று மாசு, இந்தியாவில் ஏற்படும் கருச்சிதைவு..!

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு, காற்றின் தரம் குறைவாக இருப்பதால், கருச்சிதைவுகள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று தி லான்செட் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரத்தை மேம்படுத்துவது மூலம் கருச்சிதைவுகள் அபாயத்தை குறைக்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் ஆண்டுக்கு 349,681 கருச்சிதைவுகள் ஏற்பட்டுப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்ணயித்த ஒரு கன மீட்டர் காற்றில் (10 μg ) மைக்ரோ கிராம் நுண்துகள் இருக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த காற்று மாசுபாட்டுத் தரங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே கிட்டத்தட்ட 29.7% கருச்சிதைவுகளை தவிர்க்கலாம் என்று ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் உள்ள காற்றின் தரம் ஒரு கன மீட்டருக்கு (40μg ) மைக்ரோ கிராம் நுண்துகள் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த 2000 முதல் 2016 ஆண்டு வரை ஒவ்வொரு வருடம் 7 சதவீத கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும்  கருச்சிதைவிற்கு இதுவே காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர். தெற்காசியா உலகளவில் அதிகமாக கருச்சிதைவு ஏற்படும் பகுதியாக உள்ளது என்று சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வின் முன்னணி எழுத்தாளர் தாவோ சூ கூறியுள்ளார்.

காற்றில் உள்ள நுண்துகள்கள் அளவை பொருத்து காற்றின் தன்மை கணக்கிடப்படுகிறது. PM2.5 என்பது காற்றில் உள்ள  சிறிய துகள்கள், PM10 என்பது பெரிய துகள்கள். பொதுவாக காற்று மாசுபாட்டின் அளவு 50-க்கும் குறைவாக இருக்கவேண்டும். அதுவே காற்று மாசுபாட்டின் அளவு 300-க்கும் அதிகமாக இருந்தால் அது ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM2.5 என்பது சிறிய துகள்கள் என்பது சராசரி மனித முடியை விட முப்பது மடங்கு அகலம் கொண்டவை. துகள்கள் சுவாசக்குழாயில் ஆழமாக பயணித்து நுரையீரலை அடையலாம், இதனால் ஆஸ்துமா மற்றும் இதய நோய் போன்ற மருத்துவ நிலைமைகளை மோசமாக்குகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

author avatar
murugan