திருப்போருர் அகோர வீரபத்திர சாமி கோவிலில் சிவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது !!!!!!

  • திருப்போரூர் அனுமந்தபுரம்  அகோரவீரபத்திரசாமி திருகோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
  • இந்த கோவில் செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலமாகவும்  விளங்குகிறது.

மகா சிவராத்திரியை  முன்னிட்டு இன்று சிவனை வழிபட்டால் அவரின் அருளை முழுவதுமாக பெறலாம்.மேலும் இன்றைய நாளில் தூங்காமல் அவரின் நாமங்களை உச்சரித்து அவரை வழிபட்டால் அவரின் அருளை முழுவதுமாக பெறலாம். சிவராத்திரி என்றால்  பல கல்பகோடி இரவுகள் ஒன்று சேர்ந்து வந்த ராத்திரி என்று கூறுவர். சிவராத்திரி அன்று பூஜை செய்தால்  பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்று  சித்தர்கள் கூறுகிறார்கள்.

இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பல கோவில்களில் மிகவும் விசேஷமாக சிவராத்திரிவிழா கொண்டாடபிபடுகிறது.இந்நிலையில்  திருப்போரூர் அனுமந்தபுரம்  அகோரவீரபத்திரசாமி திருகோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இன்று காலை10 மணிக்கு மஹா அபிஷேகம் ,தூப தீப ஆராதனை நடை பெற இருக்கிறது. மேலும் 7 மணிக்கு நாதஸ்வர கச்சேரியும், நடை பெற இருக்கிறது. மேலும் 12 மணிக்கு அகோரவீரபத்திரசாமிக்கு சிறப்பு பூஜைகளும், மலர் அர்ச்சனைகளும் மேலும் வெற்றிலை காப்பு அலங்காரமும் நடை பெற இருக்கிறது. எனவே பக்தர்கள் இரவு முழுவதும் கோவிலில் இருந்து வழிபடுவதற்கு ஏதுவாக முழுநேரமும் நடை திறந்து வைக்கபட்டுள்ளது.

Leave a Comment