திடீரென இரட்டைரோஜா தொடரிலிருந்து வெளியேறிய ஷிவானி.! அவருக்கு பதில் யார் தெரியுமா.?

திடீரென இரட்டைரோஜா தொடரிலிருந்து வெளியேறிய ஷிவானி.! அவருக்கு பதில் யார் தெரியுமா.?

இரட்டை ரோஜா தொடரிலிருந்து ஷிவானி திடீரென வெளியேறியதை அடுத்து, சாந்தினி தமிழரசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று இரட்டை ரோஜா. இதில் இரட்டை வேடத்தில் நடித்து வருபவர் ஷிவானி. இவர் ஏற்கனவே விஜய் டிவியில் பகல்நிலவு என்ற தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இரட்டை ரோஜா தொடரிலிருந்து ஷிவானியை திடீரென நீக்கியதாகவும்,இனி முதல் அவரது கதாபாத்திரத்தில் சாந்தினி தமிழரசன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி ஷிவானி ரசிகர்களுக்கு சற்று வருத்தமான விஷயம் தான்.