29 C
Chennai
Wednesday, June 7, 2023

இன்றைய (7.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

382-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல்...

கருப்பு கவுணி கொலஸ்ட்ராலை கட்டுபடுத்துமா…?

கருப்பு கவுனியில் உள்ள  மருத்துவ குணங்கள்.  கருப்பு கவுனி என்பது...

இந்தியப் பெருங்கடலில் கப்பல் கவிழ்ந்து விபத்து…39 பேர் மாயம்.!!

இந்தியப் பெருங்கடலில் சீன மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் இயங்கி வந்த சீன மீன்பிடி கப்பல்  மூழ்கியதில் அதில் இருந்த 39 பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை ) அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

திடீரென கப்பல் கவிழ்ந்ததில் 17 சீனர்கள், 17 இந்தோனேஷியர்கள், 5 பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 39 பேர் மாயமாகி உள்ளனர்.  இதுவரை, காணாமல் போனவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், மீட்புக் குழுக்களை அனுப்பி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனையடுத்து, மீட்பு பணி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் இருந்து தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன.

மேலும், இந்த நடவடிக்கைக்கு உதவ சீனா இரண்டு கப்பல்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் இயங்கி வந்த சீன மீன்பிடி கப்பல் கவிழ்ந்து 39 பேர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.