றெக்கை மட்டும் வச்ச நீங்க தேவதைங்க .!தாவணியில் தமிழ் பெண்ணாக ஷெரின் பேபியின் அழகிய ஸ்டில்ஸ் .!

பிக்பாஸ் பிரபலமான ஷெரினின் தாவணியில் உள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

ஷெரின், ஆரம்ப காலத்தில் தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனையடுத்து விசில் படத்தில் உள்ள ‘அழகிய அசுரா’ பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆம், இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், வழக்கமாக புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் இவர் தற்போது ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் தாவணியில் அசல் தமிழ் பெண்ணாக உள்ள அட்டகாசமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது .