81வயதிலும் புஷ்அப் எடுக்கும் பிரபல நடிகரின் தாய்.! 

பிரபல நடிகரான மிலிந்த் சோமன் தனது தாயின் புஷ் அப் வீடியோவை வெளியிட்டு, தற்போது

By ragi | Published: Jul 07, 2020 03:28 PM

பிரபல நடிகரான மிலிந்த் சோமன் தனது தாயின் புஷ் அப் வீடியோவை வெளியிட்டு, தற்போது அது வைரலாகி வருகிறது. மிலிந்த் சோமன், தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர். இவர் மைலின் ஜம்பனாஸை என்ற நடிகையை 2006ல் திருமணம் செய்து கொண்டு, கருத்து வேறுபாடு காரணமாக 2009ல் விவகாரத்து செய்து கொண்டனர். அதனையடுத்து 2018ல் 25வயதான அங்கிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு சர்ச்சைகளில் சிக்கினார். 54 வயதிலும் மிகவும் ஃபிட்டாக உள்ள இவர் தனது குடும்பத்தினருடன் தற்போது மகிழ்ச்சியாக உள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் தனது தாயின் 81வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது தனது தாய் புஷ் அப் எடுக்கும் அழகான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதிலும் இவ்வளவு ஆரோக்கியமாக உள்ளீர்களே என்று கமென்ட் செய்து வருகின்றனர். மேலும் ஒரு சிலரை  அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Step2: Place in ads Display sections

unicc