தலைவர் நிரந்தரம் வசூல் பயங்கரம்! லாபத்தில் பங்கு + BMW X7 கார்..,கொண்டாட்ட மழையில் ரஜினிகாந்த்!

By

Jailer - Rajinikanth

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

படம் வெளியான நாளிலிருந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது என்றே சொல்லலாம். அதன்படி, ரூ.240 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஜெயிலர் திரைப்படம் உலக முழுவதும் ரூ.600 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர திரையரங்கு உரிமைகள் மற்றும் ஓடிடி உரிமகள் என வசூலில் தனி லாபத்தை ஈட்டியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தயாரிப்பாளர்கள் படத்தின் வெற்றியை நடிகர் ரஜினிகாந்துடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினியின் வீட்டிற்கு நேரில் சென்று லாபத்தில் சிறிது பங்கை வழங்கியுள்ளார். ரஜினிகாந்திடம் கலாநிதி மாறன் வழங்கிய காசோலையில் ‘Record Maker’ என குறிப்பிடப்பட்டள்ளது. இது தொடர்பான, புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஜெயிலர் படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ரஜினிக்கு  ரூ.110 கோடி சம்பளம் வழங்கியுள்ளதாகவும், கலாநிதி மாறன் வழங்கிய காசோலையில் படத்தின் லாபத்தில் இருந்து 100 கோடி ரூபாயை தயாரிப்பாளர் கூடுதல் தொகையாகக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்

கலாநிதி மாறன் நேற்று ரஜினிகாந்திடம் காசோலை வழங்கியதுடன் மேலும், நடிகர் ரஜினிகாந்த்-க்கு BMW X7 காரையும் பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், வெவ்வேறு கார்கள் ரஜினிக்கு காண்பிக்கப்பட்ட நிலையில், அவர் BMW X7 காரை தேர்வு செய்தது தெரியவந்துள்ளது. இந்த BMW X7 காரின் மதிப்பு ரூ.1.24 கோடி ஆகும்.