“துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு அவமானம்!”- டிரம்ப் விமர்சனம்

அமெரிக்க நாட்டின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது அமெரிக்காவுக்கு அவமானம் என அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 80 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்.

மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர்களின் கூட்டணியை அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து விமர்சித்து கொண்டே வருகிறார்.

அந்தவகையில் இன்று வடக்கு கரோலினாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அதில் அவர், அமெரிக்காவில் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது அமெரிக்காவுக்கே அவமானம் என டிரம்ப் விமர்சித்துள்ளார்.