பிரபல தயாரிப்பாளர் கரீம் மோரானியின் மகள் ஷாஸா மோரானி கொரோனா உறுதி

சீனாவை தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் கொரோனா  வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஷாருக்கானின் நெருங்கிய நண்பரும், ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ தயாரிப்பாளருமான கரீமா மோரானியின் மகள் ஷாஸா மோரானிக்கு கொரோனா வைரஸ் உறுதி  செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையின் ஜுஹு பகுதியில் ஷாகுன் என்ற கட்டிடத்தில் வசிக்கும் ஷாஸா, ஞாயிற்றுக்கிழமை  இரவு நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அவரது தந்தை கரீம் மோரானி அவர்கள் கூறுகையி’ல், என் மகள் ஷாஸா எந்த வெளிநாட்டு பயணிகளுடன் ஒன்றிணைந்திருக்கவில்லை, மேலும் கோவிட் அறிகுறிகள் எதுவும் இல்லை. நாங்கள் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்பதால் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது எனது கடமையாகும். அவரை நானாவதி மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்க அனுமதிக்கிறோம்.’ என தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.