‘இன்னும் சில மாதங்கள் முடியை வளர்க்கட்டுமா?!’ ரசிகர்களிடம் கருத்து கேட்கும் கிங் கான்!!

பாலிவுட் சினிமாவின் கிங் கான் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹீரோ ஷாருக்கான். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜீரோ படத்தில் குள்ளமான மனிதராக நடித்திருந்தார். உடன் அனுஷ்கா ஷர்மா, கத்ரீனா கைஃப் ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை.

இதனால் அடுத்த படத்தை எப்படியும் ஹிட்டாக்க வேண்டும் என முயற்ச்சித்து வருகிறார். தனது அடுத்த படத்திற்காக நீண்ட தலைமுடி வளர்த்து வருகிறார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இன்னும் சில மாதங்கள் இதை விட அதிகமாக முடி வளர்க்க போகிறேன் என கூறினார். இதனை பார்த்த ரசிகர்கள் பாராட்டியும் கிண்டலடித்தும் வருகின்றனர்.

DINASUVADU

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here