கழிவுநீர் தகராறு: பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கைது..!

கழிவுநீர் பிரசச்னையால் பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திய

By bala | Published: Jul 13, 2020 03:28 PM

கழிவுநீர் பிரசச்னையால் பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்டம் ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரில் வசித்து வந்தவர் செல்வம் இவர் ககூலி தொழில் செய்துவருகிறார், மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் தேவி இவர்கள் இருவருக்கும் கால்வாயில் கழிவுநீர் விடுவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் சன்டை இருவருக்கும் இடையே பெரிதாக இதில் ஆத்திரமடைந்த தேவி மகன் குறளரசன் வேகமாக சென்று தனது நண்பர்களை அழைத்து வந்து செல்வத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வேளச்சேரியில் பதுங்கியிருந்த குறளரசன், அவரது தாய் அஞ்சலை தேவி, சதீஷ், ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர் மேலும் இது தொடர்பாக விசாரணை செய்த போலீசார் கூறியது குறளரசன் மீது முன்னதாகவே 2 கொலை வழக்கு உள்ளது, மேலும் ஏதாவது கொலை செய்தால் ஏரியாவில் கெத்தாக வலம் வரலாம் என்ற எண்ணத்தில் செல்வத்தை கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த கொலைவழக்கில் தலைமறைவாக இருக்கும் 4 பேரை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc