வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் – விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை!!

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், தற்போது விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை.

வேளாண் பட்ஜெட் பற்றி விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், வேளாண்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தமிழக சட்டப்பேரவையில் வரும் 13ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் 14ம் தேதி வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் பற்றி விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்