Mnister V SenthilBalaji

பரபரப்பான விசாரணை! காணொளி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்!

By

கைது செய்த அன்று நடந்த சம்பவம் தொடர்பாக நீதிபதியிடம் செந்தில் பாலாஜி சுருக்கமாக விளக்கம்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜி காணொளி மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாததால், காணொளி வாயிலாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்போது, அமலாக்கத்துறை மனு நகல் உங்களுக்கு அனுப்பப்பட்டதா? என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். இதற்கு அமலாக்கத்துறை மனு நகல் இன்னும் கிடைக்கவில்லை பதில் அளித்தார்.  அமலாக்கத்துறை மனுவை செந்தில் பாலாஜியிடம் அளித்து கையொப்பம் பெற நீதிமன்ற பணியாளர்க்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.

மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வந்தபோது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். உள்துறை அமைச்சர் வந்த அடுத்த நாள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ வாதம் முன்வைத்தார். மேலும், கைது செய்த அன்று நடந்த சம்பவம் தொடர்பாக நீதிபதியிடம் செந்தில் பாலாஜி சுருக்கமாக சொன்னதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கைதாகியுள்ள செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை வைத்துள்ளது. தற்போது இதுதொடர்பான மனு மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, செந்தில் பாலாஜியிடம் போதிய அளவு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால் மீண்டும் அமலாக்கத்துறை  அனுமதிக்கக்கூடாது என வழக்கறிஞர் இளங்கோ தெரிவித்தார்.

Dinasuvadu Media @2023