,
Sensex Rise

உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்..! 466 புள்ளிகள் உயர்ந்து நிறைவு..!

By

சென்செக்ஸ் 466.95 புள்ளிகள் உயர்ந்து 63,384.58 ஆகவும், நிஃப்டி 18,769 ஆகவும் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை கடந்த 4 நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வந்தது. இந்நிலையில் வாரத்தின் 5வது நாளான இன்று 62,960 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 466.95 புள்ளிகள் அல்லது 0.74% என உயர்ந்து 63,384.58 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 137.90 புள்ளிகள் அல்லது 0.74% உயர்ந்து 18,826 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 62,917 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,688 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இன்று காலை நிலவரப்படி, சென்செக்ஸ் 239.56 புள்ளிகள் உயர்ந்து 63,157 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. அதே சமயம்,  நிஃப்டி 81.60 புள்ளிகள் உயர்ந்து 18,769 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உச்சத்தில் முடிவடைந்துள்ளன.

எச்டிஎஃப்சி வங்கி லிமிடெட், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் கோ., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஹெச்டிஎஃப்சி லிமிடெட் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. அதேசமயம், டிசிஎஸ் லிமிடெட், இன்ஃபோசிஸ் லிமிடெட், விப்ரோ லிமிடெட், எல்&டி லிமிடெட் மற்றும் பஜாஜ் ஆட்டோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.