டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வு ரத்து.!

டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தேர்வுகள்

By murugan | Published: Jul 11, 2020 02:11 PM

டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தேர்வுகள் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகிறது. இந்நிலையில், டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தேர்வுகள் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது  என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

மேலும், அந்தந்த பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யும் மதிப்பீடு அளவுகளை அடிப்படையாக கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பில் அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் டெல்லி மூன்றாம் இடத்தில் உள்ளது.

டெல்லியில், இதுவரை கொரோனாவால் 1,09,140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc