,

செம மாஸ் தளபதி….அட்டகாசமாக வெளியானது ‘லியோ’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!!

By

LeoFirstLook

நடிகர் விஜய் இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது அவர் நடித்து வரும் லியோ படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

முன்னதாக படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடலுக்கான ப்ரோமோ வீடியோ நேற்று வெளியிடபட்டது. அதனை தொடர்ந்து இன்று தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 12 மணிக்கே வெளியிடபட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் மிகவும் கெத்தான லுக்கில் இருக்கிறார்.

மேலும் நா ரெடி பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது. எனவே, இன்று விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு 2 ட்ரீட்டாக அமைந்துள்ளது. மேலும் லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.