,

செம கேட்ச்…மின்னல் வேகத்தில் பாய்ந்து பிடித்த முருகன் அஸ்வின்..வைரலாகும் வீடியோ.!!

By

Murugan Ashwin CATCH

நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் முருகன் அஸ்வின் செம கேட்ச் பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணியும், திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.

இந்த போட்டியில் முருகன் அஸ்வின் டைவ் செய்து பிடித்த கேட்ச் தான் தற்போது பேசும்பொருளாகியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது.

பின், 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. அப்போது, 3-வது ஓவரில், வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங், எஸ் அருணுக்கு எதிராக  லெங்த் பந்து வீசினார். இந்த பந்தை எதிர்கொண்ட எஸ் அருன் சிக்ஸர் அடிக்க முயன்றார்.

அப்போது, மிகவும் உயரத்திற்கு சென்ற அந்த பந்தை பார்த்துக்கொண்டே மின்னல் வேகத்தில் முருகன் அஸ்வின் கேட்ச் பிடித்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைராகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.


இந்த அற்புதமான கேட்ச் ஆட்டக்காரர்களையும் பார்வையாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும், கோவை அணி 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்து, சேப்பாக் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.