காதலர் தினத்தை முன்னிட்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ட்ரீட்!

காதலர் தினத்தை முன்னிட்டு 96 திரைப்படம் ரேடியோ சிட்டி பண்பலையில் இரவு 9 மணிக்கு ஒலிசித்திரமாக ஒளிபரப்பப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை திரிஷா ஜானகிதேவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் பள்ளிப்பருவ காதலைப் மையமாக வைத்து எடுக்கப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் தமிழில் மட்டுமல்லாது கன்னடம் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து காதலர் தினத்தை முன்னிட்டு 96 திரைப்படம் ரேடியோ சிட்டி பண்பலையில் இரவு 9 மணிக்கு ஒலிசித்திரமாக ஒளிபரப்பப்படுகிறது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.