பாஜக சார்பில் போட்டியிடுவது குறித்து..!அதிரடி வீரர் ஷேவாக்..!

23

பாஜக சமீபத்தில் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை தேர்தல் களத்தில் இறக்க உள்ளது என்ற சொல்லப்பட்டு வந்த நிலையில் அதில் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் கிரிக்கெட் வீரர் ஷேவாக் இடம்பெற்றிருந்தனர் என்று ஒரு தகவல் பரவியது.இந்நிலையில்  மலையாள நடிகர் மோகன்லால் பா.ஜனதா சார்பில் கேரளாவில் போட்டியிடப் போவதாக கூறப்பட்ட நிலையில் அவர் இதை மறுத்து விட்டார்.

இந்த நிலையில் அடுத்து முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் ஷேவாக் பாஜக சார்பில் அரியானா மாநிலம் ரோத்தக் தொகுதியில் போட்டியிட உள்ளதாக போவதாக செய்திகள் வெளியாகி  பரப்பை ஏற்படுத்தியது. இதை ஷேவாக்கும்  மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியது 2014-ம் ஆண்டு வந்த வதந்திகள் தான் இப்போதும்      வருகின்றது.புதுமை எதுவுமில்லை. அப்போதும் சரி ஏன் இப்போதும் சரி தேர்தலில் போட்டியிடும் ஒரு எண்ணம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.