மதச்சார்பற்ற கூட்டணி… ஊழலற்ற ஆட்சியே எங்களின் நோக்கம்… K.S அழகிரி பேட்டி…!!

13
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கின்ற சூழலில் அனைத்து கட்சிகளும் , கூட்டணி மற்றும் தேர்தல் பணி , பிரச்சாரம் சுற்றுப்பயணம் என தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடலூர் மாவட்ட கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் K.S அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ,  கடலூர் N.L.C நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்த  தரிசு நிலங்கள் கடற்கரை பகுதிகளில் உள்ள நிலங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி அமைக்கப்பட்டிருக்கின்றது என்று அவர் தெரிவித்தார் மேலும் தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார் .