4.9 C
London
Saturday, November 27, 2021

ஆக. 26-ல் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் -சட்டப்பேரவைச் செயலர் அறிவிப்பு …!

ஆகஸ்ட் 26-ல் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுவதாக அம்மாநில சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்ததால் கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அப்போதைய காங்கிரஸ் அரசு தோற்றதால் மத்திய அரசே நேரடியாக புதுச்சேரிக்கு 5 மாத இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.இதனையடுத்து,தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது.

இந்நிலையில்,புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 26 ஆம் தேதி கூடுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி வெளியிட்ட தகவலில், “வருகின்ற ஆகஸ்ட் 26-ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது.இந்த பேரவைக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரை நிகழ்த்துகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

Hot Topics

Read More