33 C
Chennai
Saturday, July 31, 2021

பாக்ஸிங் டே போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது வெற்றி இது.!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 8 பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள இந்தியா 2 போட்டிகளில் வென்றுள்ளது.

மெல்போர்ன் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதனால், நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது. இதன் மூலம், 2020-இல் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 8 பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள இந்தியா 2 போட்டிகளில் வென்றுள்ளது. 8 போட்டிகளில் 5 தோல்வியும், ஒரு போட்டி ட்ராவிலும் முடிந்த நிலையில், 2 போட்டிகளில் இதுவரை இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news