சியான் விக்ரமின் அடுத்த படம் தல பட இயக்குநருடனா.?

சியான் விக்ரம் அவர்களின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக

By ragi | Published: Jul 01, 2020 07:44 PM

சியான் விக்ரம் அவர்களின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.  மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார் விக்ரம். அது மட்டுமின்றி மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார். அதனையடுத்து விக்ரம் அவர்களின் 60 வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகன் துருவ் உடன் இணைந்து முதல் முறையாக நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது விக்ரம் அவர்கள் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்துடன் தொடர்ந்து 4 ஹிட் படங்களை கொடுத்த சிறுத்தை சிவா தற்போது ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்குகிறார். கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இந்தப் படம் ஒரு கமர்ஷியல் படமாக இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. இது மட்டும் உண்மையெனில் முதல் முறையாக இணையும் இந்த கூட்டணியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது படத்தில் விக்ரமை வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

Step2: Place in ads Display sections

unicc