சீமானின் பேச்சு, என் மீதான காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.! திருமாவளவன் பேட்டி.!

என் மீதான காழ்புணர்ச்சியில் தான் சீமான் இவ்வாறு பேசுகிறார் . – திருமாவளவன் விளக்கம். 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் வாசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. இன்னும் குற்றவாளிகள் கண்டதிரியப்படவில்லை .

இது குறித்து முன்னதாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், பெரும்பாலான கட்சிகள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறுகையில்,  வேங்கை வயல் விவகாரத்தில் பிற கட்சிகளை குற்றம் சொல்ல திருமாவளவனுக்கு தார்மீக அடிப்படையில் தகுதியில்லை. என குறிப்பிட்டார். மேலும், அவர் கூட்டணி வைத்திருக்கும் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் ஏன் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பவில்லை? என கேள்வி எழுப்பினார்.

மேலும், முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து போராட்டம் நடத்துவாரா? அல்லது நான் முன்னெடுத்த இதுபோன்ற பல பிரச்சனைகளுக்கு அவர் எங்களுடன் களத்தில் இதுவரை நின்றாரா? நான் மட்டும் முதலமைச்சராக இருந்திருந்தால், இந்நேரம் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்து ஜெயிலில் அடைத்திருப்பேன். என்றும்,  பெரியார் மண், சமூக நீதிக்கான மாநிலம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை என விமர்சித்து நாம் தமிழர் கட்சி சீமான் பேசியிருந்தார்.

சீமான் பேசிய விமர்சனங்கள் குறித்து பேசிய திருமாவளவன், சீமானுக்கு வேங்கைவயல் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதைவிட, தமிழகத்தில் பெரியார் எதிர்ப்பு, திராவிட எதிர்ப்புத்தான் மேலோங்கியுள்ளது. அவர் என்னை விமர்சனம் செய்துள்ளது என் மீதான காழ்ப்புணர்ச்சியை தான் காட்டுகிறது என தனது பதில் விளக்கத்தை திருமாவளவன் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment