#RIPManobala: மனோபாலா மறைவுக்கு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த திரைகடல்…!

நடிகரும், இயக்குனருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனோபாலா, இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

ரஜினிகாந்த் இரங்கல்:

பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

பாரதிராஜா இரங்கல்:

என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

கருணாஸ் இரங்கல்:

ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன், அனைவரிடமும் அன்பு செலுத்தக்கூடியவர்.

ராதிகா இரங்கல்:

இதயம் நொறுங்கியதாக உணர்கிறேன், இன்று காலையில்தான் அவரிடம் போனில் பேசினேன். இருவரும் சிரித்து, சண்டையிட்டு, சாப்பிட்டு பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளோம், நாம் அனைவரும் அவரை மிஸ் செய்வோம்.

சத்யராஜ் இரங்கல் செய்தி:

இயக்குனர் மனோபாலா மறைவுக்கு நடிகர் சத்யராஜ் விடுத்துள்ள இரங்கல் செய்தி.

இயக்குநர் சேரன் இரங்கல்:

தாங்க முடியாத செய்தி, மனதை உலுக்கி எடுக்கிறது, நான் பெற்ற உங்களின் அன்பு மறக்க முடியாதது. போய்வாருங்கள் மாமா…

சார்லி இரங்கல்:

மனோபாலா படத்துக்கு மட்டும்தான் BGM -ல கூட ஆடியோ கேசட் வந்துச்சு. ஈகோ இல்லாத ஒரு கலைஞர், இவரோட இழப்ப என்னால தாங்க முடியல.

இயக்குனர் சீனுராமசாமி இரங்கல்:

அண்ணன் மனோபாலாவின் மறைவு செய்தியால் உறைந்தேன். அவர் இயக்கிய பிள்ளை நிலா வீட்டில் எனது இடிமுழக்கம் படப்பிடிப்பு நடந்தது அதில் அவர் நடித்தார்! என் மீதும் என் குடும்பத்தார் மீதும் பேரன்பு கொண்டவர். பிறரை வாழ்த்தி மகிழ்பவர். வாழ்த்தக்கூடிய மனம் என்பது இயற்கையின் குணம், அது இன்று இயற்கையோடு கலந்து விட்டது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.