பள்ளிகள் திறப்பு : விமர்சனங்கள் எழுந்தாலும் பரவாயில்லை – அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகள் முழுவதுமாக திறக்காததால், விமர்சங்கள் எழுந்தாலும் பரவாயில்லை. இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.

தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனையடுத்து, தொற்று பாதிப்பு குறைந்து வந்ததால், செப்.1-ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரை  மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடைபெற்றது. அதன்பின் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்ததால், என் முடிவுகளும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், பள்ளிகள் முழுவதுமாக திறக்காததால், விமர்சனங்கள் எழுந்தாலும் பரவாயில்லை. இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.