ஆந்திராவில் ஆகஸ்ட்டில் பள்ளிகள் திறப்பு.!

ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்ட்-3 ம் தேதி பள்ளிகளை திறக்கப்படும் என வெளியாகி உள்ளது. 

கொரோனா தாக்கம் காரணமாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்தும், ஒத்திவைத்தும் மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் இதுவரை 2474 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்,  1552 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 50 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக குறையாததால் 4 கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் வருகின்ற ஆகஸ்ட் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 

author avatar
Dinasuvadu desk