பீகாரில் செப்டம்பர் 28 முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.!

பீகாரில் செப்டம்பர் 28 முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.!

பீகாரில் செப்டம்பர் 28 முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.

பீகார் மாநிலத்தில், 6 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பள்ளிகளை செப்டம்பர் 28 முதல் மீண்டும் திறக்க பீகார் அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், நான்காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, 9-12 வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுக்காக பெற்றோரிடமிருந்து ஒப்புதல் அளித்த பின்னர் பள்ளிகளுக்கு அனுப்பலாம்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்னும் பல மாநிலங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கவில்லை என்றாலும், பீகார் மாநில அரசு செப்டம்பர்-28 முதல் பள்ளியை மீண்டும் தொடங்க அனுமதித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube