மராட்டியத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு..!

மராட்டியத்தில், ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த 8-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், 16 நாட்கள் இடைவெளிக்கு பின் தற்போது, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும், பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நாட்டில், கொரோனா  அதிகம் பாதிக்கப்பட்டது மராட்டிய மாநிலம் தான்.  தலைநகர் மும்பையில்  கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த   நிலையில், கடந்த டிசம்பரில் தான் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த 8-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 16 நாட்கள் இடைவெளிக்கு பின் தற்போது, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நோய் கட்டுப்பாட்டு வழிமுறைகளை  கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில்,  கல்விதுறை  அமைச்சர் வர்ஷா கேக்கவாட் கூறுகையில், மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வருமாறு நிர்பந்திக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.