ரெடியா ! இன்று முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடங்கியதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது.இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி வழியாக நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் காரணமாக கடந்த 5 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டு  இருந்தது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி முடிவடைந்தது.வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு என்னும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இதனால் மீண்டும் 12 ஆம் வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது.

வாக்குச்சாவடிகளாக செயல்பட்ட பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கொரோனா பரவல் தடுக்க  மிகுந்த பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இன்று முதல்  12ம் வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குகிறது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின் படி தொடங்குகிறது.அதன்படி ஒவ்வொரு பள்ளிகளையும் சுத்தப்படுத்தும் பணிகளை முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி தேர்வுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் மே 2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் 12 வகுப்புகளுக்கான தேர்வுகள் மே 3ஆம் தேதிக்கு பதிலாக ஒரு வார காலம் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Dinasuvadu desk