ஒடிசாவில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது.? முதல்வர் நவீன் பட்நாயக் விளக்கம்.!

ஒடிசாவில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது.? முதல்வர் நவீன் பட்நாயக் விளக்கம்.!

ஒடிசாவில்  பள்ளிகள், கல்லூரிகள் துர்கா பூஜை விழா வரை திறக்கபடாது என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

ஒடிசா  மாநிலத்தில் துர்கா பூஜை விழா வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மாநிலத்தில் கொரோனா நிலைமை குறித்த மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவை முதல்வர் எடுத்துள்ளார் இந்நிலையில் அக்டோபர் மாதம் வரை மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள்  மூடப்பபட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஒடிசாவில் அக்டோபர் 22 முதல் 26 வரை ஐந்து நாள் துர்கா பூஜா திருவிழா நடைபெற உள்ளது. மேலும், ஒடிசாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் மத்திய அரசின் உத்தரவுப்படி மீண்டும் திறக்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.

 

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube