பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் உலர் உணவு பொருட்கள் வழங்க உத்தரவு..!

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் உலர் உணவு பொருட்கள் வழங்க உத்தரவு..!

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களுடன் 5 முட்டைகளையும் சேர்த்து வழங்க தமிழக அரசு  உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பரவல் காரணமாக அடைக்கப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து,  ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களுடன் 5 முட்டைகளையும் சேர்த்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி மாதத்திற்கான வேலை நாட்களை கணக்கிட்டு பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்றும், பள்ளி மாணவரோ அல்லது அவரது பெற்றோரோ அடையாள அட்டையை காண்பித்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube