குழந்தை திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவு…!

மாணவிகளுக்கு குழந்தை திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்கள் பலரும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், ஏதோ ஒரு இடத்தில் குழந்தைகளுக்கான வன்கொடுமைகள் அரங்கேறிய வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், மாணவிகளுக்கு குழந்தை திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, 8-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியைகளை பொறுப்பாக நியமிக்க வேண்டுமென்றும், தலா 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை என பொறுப்பாளரை நியமித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், ஆசிரியர்களை பொறுப்பாளராக நியமிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.