#BREAKING: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

#BREAKING: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து 11 ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கை என்று தொடங்கி இருக்கிறது. கொரோனா குறைந்த 27 மாவட்டங்களில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக இன்று காலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார்.

மீதமுள்ள 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்ததன் பின்பாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை மாணவர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமைகளுக்கு உதவியாக ஆசிரியர் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரியவும் அவ்வாசிரியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை அந்தந்த ஆட்சித் தலைவர்களிடம் கோரி நடைமுறைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2021-22-ஆம் கல்வியாண்டிற்கு 11-ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தன. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் அதே வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2020-21 ஆம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்று முதல் 12 வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தேர்ச்சி விவரங்களை (EMIS) இணைய தளத்தில் உள்ளீடு செய்வதற்கு தேவையான அறிவுரைகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube