ஃபரூக் அப்துல்லா எங்கே?30-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஃபரூக் அப்துல்லா எங்கே  என்பது குறித்து வரும் 30-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும்,காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது .இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில்  ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் ஆட்கொணர்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அதில், ஃபரூக் அப்துல்லா எங்கே  என்பது குறித்து வரும் 30-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ஃபரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.