பாலு நினைவிலே என்றும் இருப்பேன்… பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இரங்கல்…

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இரங்கல் செய்தி விடுத்துள்ளார்.
அதில், என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்னுடைய உடன்பிறப்பு போன்றவர். பாலு என்னை அண்ணா என்று கூப்பிடும்போது, நாங்கள் ஒரு அம்மா வயிற்றில் பிறந்தவர்கள் போல நான் உணர்வேன். நாங்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள் போல பழகினோம். முன் ஜென்மத்தில் நாங்கள்  இருவரும் சகோதரர்களாக இருந்திருக்கலாம். பாலு முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும், அவருடைய சங்கீத ஞானம் மிகப்பெரியளவில் இருக்கும். பாட்டுப்பாடவும் செய்வார், உருவாக்கமும் செய்வார். யாரையும் அவர் புண்படுத்த மாட்டார்.
கூட இருக்கும் எல்லோரையும் அன்பாகவும், ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார். கடைசியாக நாங்கள் இருவரும் பாடியது ஒரு சிங்கப்பூர் நிகழ்ச்சியில் தான்.
பாலு நோய் குணமாகி எப்போது வீடு திரும்புவார்? என நான் அமெரிக்காவில் காத்துக்கொண்டிருந்தேன். கொரோனா ஊரடங்கு காரணமாக நான் அமெரிக்காவில் இருந்து இங்கே வர அனுமதி கிடைக்கவில்லை. என்னால் அவரை பார்க்க முடியவில்லை என ஒருபக்கம் வருத்தம் இருந்தது. அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க என் மனம் தாங்காது என்றும், அவர் நினைவுகளுடனே  நான் எப்போதும் இருப்பேன் என்று ஜேசுதாஸ் கூறியிருக்கிறார்.
author avatar
kavitha