மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் – எடப்பாடி பழனிசாமி..!

மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் – எடப்பாடி பழனிசாமி..!

மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்.

இன்று நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சார்ந்த தனுஷ் என்ற மாணவர் மருத்துவர் ஆக வேண்டும் கனவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், அந்த இரண்டு முறையும் அவர் தேர்வில் தோல்வியுற்ற நிலையில், மூன்றாவது முறையாக இன்று நீட் தேர்வு எழுத இருந்தார்.

இரவு 1 மணி வரை தனது தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த தனுஷ், பின்னர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில்,

நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன்.

அதற்கு சரியான பதிலைக் கூறி, மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் 19 வயது தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்க கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube