#SAvIND: தொடரை தக்கவைக்குமா இந்தியா? – 288 ரன்கள் அடித்தால் தென்னாப்பிரிக்கா வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பார்ல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் தொடங்கிய இப்போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீர்ரகளான கேப்டன் கேஎல் ராகுல், மற்றும் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை தொடங்கினர்.

பின்னர் திடீரென ஷிகர் தவான் 29 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி ரன் எதும் எடுக்கலாம் டக் -அவுட்டானார். இதன்பின் நிதானமாக விளையாடி வந்த கேஎல் ராகுல் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து, 55 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இவருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ரிஷப் பந்த் அதிகபட்சமாக 71 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.  இவர்களை தொடர்ந்து வந்த இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் ஷர்துல் தாக்கூர் 40 ரன்களும் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியை இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை எடுத்துள்ளது. தென்னாபிரிக்கா பந்துவீச்சை பொறுத்தளவில் அதிகபட்சமாக தப்ரைஸ் ஷம்சி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற தென்னாப்பிரிக்காவுக்கு 288 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யபட்டுள்ளது. ஒருநாள் தொடரை இழக்காமல் இந்திய அணி தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தொடரை தக்கவைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்