#SAvIND: 2வது டெஸ்ட் போட்டி – மழையால் நான்காம் நாள் ஆட்டம் தாமதம்!

இந்திய – தென்னாபிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று மழையால் நான்காம் நாள் ஆட்டம் தாமதம். 

தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 202 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி 79.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 229 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 7, முகமது ஷமி 2 , பும்ரா 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர். நேற்று 3-ஆம் நாள் ஆட்டத்தில்  இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 266 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டை இழந்தது.சிறப்பாக விளையாடிய புஜாரா 53, ரகானே 58 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

இதனால், தென்னாபிரிக்கா அணிக்கு 240 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று மீதம் இருந்த நேரத்தில் தென்னாபிரிக்கா 2 விக்கெட்டை இழந்து 118 ரன்கள் எடுத்திருந்தது. தென்னாபிரிக்கா வெற்றி பெற 122 ரன்கள் மட்டுமே தேவைப்படும் போது, வாண்டரர்ஸில் இன்று மழை பெய்து வருவதால் நான்காம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்