சவுதி ராணுவ தளபதி திடீர் நீக்கம்; சவுதி மன்னர் அதிரடி நடவடிக்கை..!!

கடந்த 2015 ஜனவரி 23-ல் சவுதி அரேபியாவில் மன்னர் சல்மான் பதவியேற்றார். பட்டத்து இளவரசராக முகமது பின் நய்யீப் பொறுப்பு வகித்தார்.

போதை மருந்து உட்கொண்டதாக எழுந்த புகாரால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மன்னர் சல்மானின் இன்னொரு மகன் முகமது பின் சல்மான் கடந்த 2017 ஜூனில் பட்டத்து இளவரசராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் சவுதி அரேபிய ராணுவ தலைமை தளபதி ஜெனரலாக இருந்த அப்துல் ரஹ்மான் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக புதிய தலைமை தளபதியாக பயாத் என்ற இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல ராணுவத்தின் மூத்த தளபதிகள், விமானப் படையின் மூத்த தளபதிகள் பலர் மாற்றப்பட்டு புதியவர்கள் அந்த பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.

அமைச்சரவையிலும் புதிய புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.பின்னர் தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சராக தமாதுர் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் பெண் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment