சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், கைதான முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமீன் மனுவை 5வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. கடந்த 2022ம் ஆண்டில் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். அதாவது, தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் விசாரணையின்போது போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இது தொடர்பாக சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர் 5 காவலர்களை கைது செய்யப்பட்டனர். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை விரைவில் முடிக்கக்கோரி ஜெயராஜ் மனைவி செல்வராணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க மேலும் 3 மாத அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இதனால், சாத்தான்குளம் வழக்கு விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே, ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷின் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், கைதான முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமின் மனுவை 5வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. இத்தொடர்பான வழக்கு விசாரணை இறுதிகட்டத்தில் உள்ளது. இப்போது ஜாமீன் வழங்கினால், சாட்சியங்களை கலைக்கவும், விசாரணையில் பாதிப்பும் ஏற்படும் என சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஜாமீனுக்கு சிபிஐ மற்றும் ஜெயராஜின் மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால், ஏற்கனவே 4 முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 5-ஆவது முறையாக இன்றும் தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் காவலர்கள் என 9 பேர் கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றம் காவலில் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.