,

சாத்தான்குளம் வழக்கு விசாரணை! டிசம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

By

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட  9 பேர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சாத்தான் குளம்  தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை டிச.21ம் தேதிக்கு மதுரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

சாத்தான் குளத்தில் ஜெயராஜ் – பெனிக்ஸ் இருவரும் சிறையில், காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு, உயிரிழந்தனர்.  இவர்களது மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 10 காவல்துறையினர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிலாந்தர்.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத சிறையில் சிறப்பு வகுப்பு கேட்டும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கேட்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.  இதனையடுத்து,  சிறையில் இருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட  9 பேர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சாத்தான் குளம்  தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை டிச.21ம் தேதிக்கு மதுரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.