சாத்தான்குளம் வழக்கு மார்ச் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

சாத்தான்குளம் வழக்கு மார்ச் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

சாத்தான்குளம் வழக்கில் காவல் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் வழக்கு மார்ச் 1-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோா் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 காவலா்கள் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 18-ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்கள்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நீதிபதி தந்தை, மகன் கொலை   வழக்கை 22-ம் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் அவர்கள் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் வழக்கு மார்ச் 1-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் வழக்கும் மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவர்கள் தங்களுக்கு ஜாமீன் கேட்டு பலமுறை மனு தாக்கல் செய்தும் அவற்றை நீதிமன்றம் நிராகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube