சர்கார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய தடை..!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!

சென்னை உயர்நீதிமன்றம் சர்கார் இயக்குனர்  ஏ.ஆர் .முருகதாஸை கைது செய்ய தடைவிதித்துள்ளது.

சர்கார் எனும் படத்ததை எடுத்து ரிலீஸான நாள் முதல் தமிழக சர்கரை எதிர்த்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது சர்கார் படக்குழு. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் இருந்ததாகவும் அதனை நீக்க கோரி அதிமுக கட்சிகாரர்கள் பல இடங்களில் ஆர்பாட்ங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் படக்குழு மீது வழக்குகளும் போடப்பட்டது.

Image result for sarkar

 

இதன் பின் நேற்று இரவு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்க்கு போலிஸ் சென்றது. அவர் இல்லாத காரணத்தினால் போலிஸ் திரும்பி சென்றார்கள். இதனை முருகதாஸ் தனது டிவிட்டர் பகக்த்தில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, இன்று காலை முருகதாஸ், நீதிமன்றத்தில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு மனு கொடுத்தார்.

இந்நிலையில்  முன்ஜாமீன் கோரிய இயக்குநர் முருகதாஸ் மனு மீது உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முருகதாஸை கைது செய்ய தடைவிதித்துள்ளது.இயக்குனர் முருகதாஸை நவம்பர் 27 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.