சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு நிச்சயதார்த்தம்.! பொண்ணு யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் இயக்குனராக இரும்புத்திரை படத்தின் மூலம் அறிமுகமானவர்  பிஎஸ் மித்ரன். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தையும் இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தியை வைத்து சர்தார் என்ற அதிரடி ஆக்சன் படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கிடையில், இவருக்கும் ஊடகவியலாளர் ஆஷா மீரா ஐயப்பன் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில்,  நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டுள்ளார். இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட மங்களகரமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் பி.எஸ். மித்ரனுக்கும், ஆஷா மீரா ஐயப்பன் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here