ஷகீலா வாழ்கை வரலாற்று குறும்படத்தில் யார் நடிக்கிறார் தெரியுமா..?

ஷகீலா அவர்களின் வாழ்க்கை சம்பவத்தை குறும்படமாக எடுப்பதில் சரயுமோகன்

By ragi | Published: Jul 01, 2020 03:26 PM

ஷகீலா அவர்களின் வாழ்க்கை சம்பவத்தை குறும்படமாக எடுப்பதில் சரயுமோகன் ஷகீலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சரயுமோகன். இவர் தமிழில் தீக்குளிக்கும் பச்சை மரம், நிலா நகர், காதலுக்கு மரணமில்லை உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுடன் ராஜாவுக்கு செக் படத்தில் நடித்திருந்தார்.இந்த நிலையில் தற்போது இவர் ஷகீலா கதாபாத்திரத்தில் ஷகீலா என்ற ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார்.

அதாவது கோட்டபுரம் அக்ஷரா தியேட்டரில் ஷகீலா நடித்த டிரைவிங் ஸ்கூல் என்ற படம் வெளியாகும் போது, ரசிகர்களின் முன்பு ஷகீலா முதல் நாள் முதல் ஷோவில் தோன்றுகிறார். அதனையடுத்து அங்கு நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டது தான் இந்த குறும்படம். சுஜீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த குறும்படத்தை வரும் 5ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே ஷகீலா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படம் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc