பேட்ட, விஸ்வாசம் பஞ்ச் டயலாக்கை கலாய்க்கும் சந்தானம்!! தில்லுக்கு துட்டு-2 படத்தின் புதிய டீசர் வெளியானது!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சந்தானம். கிட்டதட்ட இவரது படங்கள் இல்லாமல் அந்த சமயத்தில் எந்த படமும் ரிலீஸாக நிலை என சொல்லும் அளவுக்கு பிசியாக நடித்து வந்தவர் திடீரென கதாநாயகனாக களமிறங்கி விட்டார்.

அவரது நடிப்பில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய திரைப்படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தை விஜய் டிவி லொல்லு சபா இயக்குனர் ராம்பாலா இயக்கி இருந்தார். பேய், திகில், காமெடி என படம் ரசிகர்களை நன்றாக கவர்ந்தது.

இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதன் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில பேட்ட படத்தின் பஞ்ச் டயலாக்கை பேய் பேசுவது போலவும், விஸ்வாசம் பட பஞ்ச் டயலாக்கை மாற்றி சந்தானம் பேசுவது போலவும் காமெடியும் திகிலும் கலந்து டீசர் உருவாகியுள்ளது.

DINASUVADU