சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை – மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கம்!

தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையை குழப்பத்திற்கு காரணம் என சம்ஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கம்.

மதுரை மருத்துவ கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள கல்லூரி முதல்வர் ரத்னவேல் மற்றும் மாணவர்களிடையே மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு விசாரணை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சுற்றறிக்கையால் வந்த குழப்பதால் தான் சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. NMC சுற்றறிக்கை பற்றி விளக்கம் பெறாமல் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கையை தவறுதலாக பதிவிறக்கம் செய்து உறுதிமொழி எடுத்தனர் என தெரிவித்தார்.

தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பியது சுற்றறிக்கை மட்டும் தான், உத்தரவு அல்ல. காலகாலமாக என்ன பின்பற்றுகிறோமோ அதையேதான் தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தெரியாமல் உறுதிமொழி எடுத்துக்கொண்டதாக விளக்கம் அளித்தனர். முதல்கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது. தேவைப்பட்டால் மேலும் விசாரணை நடத்தப்படும் என விளக்கமளித்தார். மேலும், சமஸ்கிருத உறுதிமொழியை ஆங்கிலத்தில் ஏற்றது பற்று ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி டீனையும் விசாரிப்போம் என்றும் கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்